விம்பிள்டன்: காலிறுதியில் பெடரர், நடால்

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு, நடப்புச் சம்பியனான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற நான்காவது சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்றே 20 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரர், 17 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற நடால், 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

உலகின் இரண்டாம் நிலை வீரரான பெடரர், 6-0, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் அட்ரியன் மனாரியோவை வென்றார்.

நடால், 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் ஜிரி வெஸ்லியை வென்றார்.

உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் எவ்கினியா றொடினாவை வென்றார்.

இதேவேளை, உலகின் எட்டாம் நிலை வீரரான தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சன், நேற்று  இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 7-6 (7-4), 7-6 (7-2), 5-7, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கயேல் மொன்பில்ஸை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், உலகின் 10ஆம் நிலை வீரரான ஐக்கிய அமெரிக்காவின் ஜோன் இஸ்னர், நேற்று  இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 6-4, 7-6 (10-8), 7-6 (7-4) என்ற நேர் செட்களில் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் டிசிபஸ்ஸை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், நேற்று  இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் காரேன் காஞ்சனோவை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, நேற்று இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 3-6, 6-7 (1-7) என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான அங்கெலிக் கேர்பர், நேற்று இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 6-3, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் சுவிற்ஸர்லாந்தின் பெலிந்தா பென்சிச்சை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


விம்பிள்டன்: காலிறுதியில் பெடரர், நடால்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.