விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: நான்காவது சுற்றில் நடால்

ஐக்கிய இராச்சியத் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிக்கு உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் தகுதிபெற்றுள்ளார்.

ரபேல் நடால், தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, உலகின் மூன்றாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 6-7 (2-7), 6-4, 7-5, 3-6, 0-6 என்ற செட் கணக்கில் இலத்தீவியாவின் எர்னெஸ்ட்ஸ் குல்பிஸிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், உலகின் நான்காம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போத்ரோ, தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 6-4, 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட் கணக்கில் பெனுவான் பைராவை வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதுதவிர, 12 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 4-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஐக்கிய இராச்சியத்தின் கைல் எட்மன்டை வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், உலகின் முதல்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் 6-3, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் தாய்வானின் செய் சு வேயிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஜப்பானின் நயோமி ஒஸகாவாவை வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: நான்காவது சுற்றில் நடால்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.