வென்று முதலிடத்தில் ஜுவென்டஸ்

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு ஜுவென்டஸ் முன்னேற்றியுள்ளது. உடினீஸ் அணியுடனான போட்டியில் தாம் வென்றதுடன், நாப்போலி மற்றும் இன்டர் மிலன் அணிகளுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்தே சீரி ஏ தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு ஜுவென்டஸ் முன்னேறியுள்ளது.

தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற உடினீஸ் அணியுடனான போட்டியின் 20ஆவது நிமிடத்தில், அபாரமான பிறீ கிக்கொன்றின் மூலம் போலோ டிபாலா பெற்றுக் கொடுத்த கோல் காரணமாக ஆரம்பத்தில் ஜுவென்டஸ் முன்னிலை பெற்றது.

பின்னர், போலோ டிபாலா விதி முறைகளுக்கு மீறி கையாளப்பட போட்டியின் 38ஆவது நிமிடத்தில் கிடைக்கப் பெற்ற பெனால்டியை கொன்ஸலோ ஹியூகைன் வீணாக்கினார். எனினும் பின்னர் போட்டியின் 49ஆவது நிமிடத்தில் கொன்ஸலோ ஹுயூகைன் கொடுத்த பந்தை போலோ டிபாலா கோலாக்க தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிய ஜுவென்டஸ், 2-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் வென்றது.

இதேவேளை, இன்டர் மிலனின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற நாப்போலி, இன்டர் மிலன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில், கல்லேகரி அணியின் மைதானத்தில் நடைபெற்ற லேஸியோ கல்லேகரி அணிகளுக்கிடையிலான போட்டியிலும் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. லேஸியோ சார்பாக, சிரோ இம்மொபைல் இரு கோலைப் பெற்றதுடன், மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது. கல்லேகரி சார்பாக, லியனார்டோ பவலொட்டி, நிக்கொலோ பரெல்லா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, ஜெனோவா அணியின் மைதானத்தில் நடைபெற்ற ஜெனோவா அணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் அணி வென்றது. ஏ.சி மிலன் சார்பாக பெறப்பட்ட கோலை அன்ட்ரே சில்வா பெற்றார்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் சீரி ஏ புள்ளிகள் பட்டியல் பின்வருமாறு காணப்படுகிறது

அணி                                  போட்டிகள் புள்ளிகள்

  1. ஜுவென்டஸ்         27                   71
  2. நாப்போலி             28                     70
  3. றோமா                    28                     56
  4. லேஸியோ              28                     53
  5. இன்டர் மிலன்       27                     52
  6. ஏ.சி மிலன்              27                    47

வென்று முதலிடத்தில் ஜுவென்டஸ்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.