2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஆடைத்தொழிற்சாலைக்கு வந்த பெண்களை படம் எடுத்தவர் கைது

Suganthini Ratnam   / 2016 மார்ச் 31 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் நாளை  வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக நின்றுகொண்டு இளம் பெண்களை தனது அலைபேசியில் படம் எடுத்துக்கொண்ட நின்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிவதற்காகவும் ஆடைத்தொழிற்சாலைத் திறப்பு விழா ஏற்பாடுகளுக்காகவும் வந்த இளம் பெண்களை தனது அலைபேசியில் இந்தச் சந்தேக நபர் படம் எடுத்துக்கொண்டு நின்றுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஏற்கெனவே அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட உத்தியோகஸ்;தர்கள் இதை அவதானித்துச் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.

அவரது அலைபேசியைப் சோதித்தபோது, பல்வேறு கோணங்களில் பெண்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நீல மற்றும் நிர்வாணப்படங்களும் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X