2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கல்வியினூடாகத்தான் மாற்றத்தை கொண்டு வரமுடியும்

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

கல்வியினூடாகத்தான் சமூகத்தில் மாற்றத்தினை கொண்டு வரமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சாதணை படைத்த மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை கௌரவிக்கும் வைபவம் சனிக்கிழமை(26) நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.எல்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்,

இந்த சமூகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்ற சமூகப் பிரச்சினைகள் அதனோடு இணைந்து மாறி வருகின்ற சூழலியல் தொடர்பான பிரச்சினைகள் இப்போது இந்த நாட்டில் எதிர்பார்க்கப்படுகின்ற பொருளாதார பிரச்சினைகள் சர்வதேச ரீதியாக ஏற்படுகின்ற மனித உரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகள் இவற்றுக்கெல்லாம் இளைய சமுதாயம் வழி நடத்தப்படல் வேண்டுமென்பதிலே அரசாங்கமும் அதனோடு இணைந்த அனைத்து நிறுவனங்களும் கனவமாக செயற்பட வேண்டிய காலமாக இருக்கின்றது.

தற்போது அரசாங்கம் சட்டரீதியாக பொலித்தீன் பாவனையை குறைத்துள்ளது. இருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் பொலித்தீன் வீசியெறியப்பட்டு காற்றிலே சுழன்று செல்கின்றது. இதனை நான் நேரடியாக பார்த்துள்ளேன்.

இதை சுத்தம் செய்வதில் உள்ளுராட்சி மன்றங்கள் பல சவால்களை எதிர் கொள்கின்றன. இதைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்குள்ளாகியிருக்கின்ற வயதினரை பார்க்கும் போது, பாடசாலை மாணவர்கள்தான் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.

டெங்கு தொற்று ஏற்படுகின்ற அபாயகரமான சூழலிலே இருக்கின்ற கட்டடங்களை ஆய்வு செய்யும் போது பாடசாலைக்கட்டடங்கள்தான் அதில் முன்னணி வகிக்கின்றன.

எனவே, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பது தனியே மாணவர்களின் நுண்ணறிவையும் கிரகித்தலையும் பரிசோதிப்பதல்ல. மாணவர்களின் சூழலையும் சூழல் பற்றிய அறிவையும் பரிசோதிக்கின்ற விடயமாக அந்தப்பரீட்சை வடிமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலிலே ஏற்பட்டுவருகின்ற ஆபத்து இந்த சூழலில் மாணவர் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களுடைய ஆரோக்கியம் தேக நலன் சம்பந்தமாக ஏற்படுகின்ற பிரச்சினைகள் என்பவற்றை உணரக் கூடிய வகையிலே மாணவர் சமுதாயம் மாற்றப்பட்ட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டம் பாடசாலைப்பிள்ளைகள் உட்பட அனைவருடைய போசாக்கும் குறைவாக காணப்படுகின்ற ஒரு மாவட்டம். இலங்கையிலே மட்டக்களப்பு மாவட்டம் ஆகக்குறைந்த கல்வியறிவை கொண்டுள்ள மாவட்டமாகும்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாக பாடசாலையோடு இணைந்திருக்கின்ற ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்களின் கைகளில் இருக்கின்றது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X