2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கபே அமைப்பு கடிதம்

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மாகாண சபைத்  தேர்தலை விரைந்து  நடத்துமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான அமைப்பான கபே அமைப்பு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

இதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீனினால்  செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது பலர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக கரிசனை கொண்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அரசியல் ரீதியான சாதகமான பெறுபேற்றை அடைந்துகொள்ளும் வகையில், அதற்கேற்றவாறான தேர்தல்களை முதலில் நடத்திப்பார்ப்பது அரசியல் கலாசாரமாக காணப்படுகின்றது. கடந்த அரசாங்கமும் இந்த நடைமுறையை பின்பற்றியிருந்தமை வெளிப்படையான உண்மை.

ஆனாலும், தற்போது மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரம் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டின் கீழேயே மாகாண சபைகள் காணப்படுகின்றன.

மேலும் மாகாண சபை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை ஒரு ஜனநாயக செயன்முறையாக கருத முடியாது. எனவே, மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமான செயற்பாடாகுமெனவும் கடிதத்தில் தெரிவிக்ப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .