2021 மே 06, வியாழக்கிழமை

புகைத்தல் எதிர்ப்புக் கொடி விற்பனை மூலம் நிதி சேகரிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 27 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

புகைத்தல் எதிர்ப்புக் கொடி விற்பனை மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு கோடியே 46 இலட்சத்து 75 ஆயிரத்து 20 ரூபாய் நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாக வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் பி.குணரெட்ணம் தெரிவித்தார்.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவினரால் கடந்த மே மாதம் 31ஆம் திகதி முதல் ஜுன் மாதம் 26ஆம் திகதிவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் புகைத்தல் எதிர்ப்புக் கொடி விற்பனை முன்னெடுக்கப்பட்டது.

சேகரிக்கப்பட்ட இந்த நிதி மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல்  உபகரணங்களை வழங்குதல், சிசுதிரிய புலமைப்பரிசில் கொடுப்பனவு, புகைத்தல் எதிர்ப்பு மற்றும் போதைவஸ்துப் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுச் செயலமர்வு, திரியபியச வீட்டு நிர்மாணத்துக்கு உதவுதல், சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டத்துக்கு பயன்படுத்துதல், ஆன்மிகச் செயலமர்வு உள்ளிட்டவற்றுக்காக பயன்படுத்தப்படுமெனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .