2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் நீரில் மூழ்கிய மூவர் உயிரிழப்பு

Editorial   / 2019 நவம்பர் 25 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுகேணிபகுதியில்  நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மூன்று இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது,

மீன் பிடிப்பதற்காக சென்ற இளைஞர்களில் 4 பேர் நீரில் மூழ்கிய நிலையில், ஒருவர் உடனடியாக அப்பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டிருந்தார்.

அதனையடுத்து,  காணாமல் போன மூன்று பேரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே குறித்த மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .