2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

சுற்றலாத்துறையை விருத்திசெய்ய 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோகித்)

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை விருத்திசெய்வதற்கு 10,000 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு புகையிரத வீதியில் அமைந்துள்ள சுற்றுலாத்துறை பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட மாகாணசபை உறுப்பினர் அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே,  இவ்வாறு கூறினார்.

இதில் சுற்றுலாத்துறை பாடசாலையின் தலைவர் செல்வநாயகமும் கலந்துகொண்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

கிழக்கு மாகாணத்தின் ஏனைய அம்பாறை – திருகோணமலை மாவட்டங்களில் சுற்றுலாத்துறையை  விருத்திசெய்வதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளபோதிலும், மட்டக்களப்பில் எந்தவித திட்டங்களும் இதுவரையில் தீட்டப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்துறை பிரதேசங்கள் இனங்காணப்படவேண்டும். அத்துடன், சுற்றுலாத்துறையை விருத்திசெய்து எமது மாவட்டத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல இளைஞர்கள் முன்வரவேண்டும்.
இன்று எமது மாவட்டத்தில் பாசிக்குடாவைத்தவிர வேறு எந்தப்பகுதிக்கும்  சுற்றுலாப்பயணிகள் செல்வதில்லை.காரணம் சுற்றுலாப்பயணிகள் செல்லும் பகுதிகள் மட்டக்களப்பில் இனங்காணப்படவில்லை.

இந்நிலையில், அந்த நிலைமையை மாற்றி சுற்றுலாத்துறையை விருத்திசெய்வதற்காக 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--