2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் மீன் விலை பெருமளவு அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்களின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதனால் பாவனையாளர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குளத்து மீன்கள்  பிடிக்கப்படாத நிலையில், கடல் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ அறுக்குளா மீன் 800 ரூபாயாகவும், 450 ரூபாயாக விற்கப்பட்ட 1 கிலோ பாரை மீன் 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரையிலும், 550 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ தளப்பத்து மீன் 700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

வாவி மீன்களின் விலைகளும் பெருமளவில் உயர்வடைந்துள்ளன. ஒட்டி, கயல், மணலை, கெழுத்து போன்ற மீன்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை, கோழி இறைச்சியின் விலையும் பெருமளவில் உயர்ந்துள்ளது. 375 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ கோழி இறைச்சி 500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், கோழி முட்டையொன்று 16 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--