2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி மற்றும் பிறைந்துரைச்சேனை போன்ற பிரதேசங்களில் நேற்று மாலை கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'நாட்டில் போதை வஸ்தை ஓழிப்போம்'என்ற தொனிப் பொருளில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜ.எம்.கருணாரத்னவின் பணிப்புரைக்கு அமைவாக வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஸாந்தவின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.ஜே.எஸ்.கொடிசிங்க தலைமையிலான குழுவினர் இச்சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து சந்தேகத்திற்குரிய இடங்களை பரிசோதனை செய்த போதே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு கிலோ அறுநூறு கிராம் அரைத்த கஞ்சா தூளும் 50 கஞ்சா பக்கட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச் சந்தேகநபர்கள் இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொருப்பதிகாரி கே.ஏ.ஜே.எஸ்.கொடிசிங்க தெரிவித்தார்.


                                      
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--