2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

துறைநீலாவணையில் கஞ்சாத் துகள்களுடன் சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 15 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

துறைநீலாவணைப் பகுதியில் ஒரு தொகுதி கஞ்சா தூள்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டதுடன்,  சந்தேக நபர் ஒருவர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.


பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு தலைமையிலான குழுவினர் கஞ்சா விற்பனை நிலையத்தை சுற்றிவளைத்திருந்த நிலையிலேயே, கஞ்சாத் தூள்களுடன் சந்தேக நபரைக் கைதுசெய்தனர்.  இந்நிலையில், சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார்.


கடந்த சில வாரங்களாக போதைப்பொருட்களான கஞ்சா, அபின், லேகியம், சட்டவிரோத மதுபானம் போன்றன களுதாவளை, போரதீவு, மகிழுர், கல்முனைக்குடி, கல்முனை, துறைநீலாவணை போன்ற பிரதேசங்களில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் உத்தியோகத்தர் பீ.ஆர்.மானவடு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .