2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

திராய்மடுவில் சர்வதேச வாழ்வாதார கண்காட்சி

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்கீழ் உலகவங்கியின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் மீள் எழுச்சித்திட்ட சர்வதேச வாழ்வாதார கண்காட்சி நாளை மட்டக்களப்பு, திராய்மடுவில் இடம்பெறவுள்ளது.

மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு உட்பட 12 மாவட்டங்களில் வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

உலகவங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கைக்கான உலகவங்கியின் தலைவர், மற்றும சகல வங்கிகளின் குழுவினர், மத்திய வங்கி ஆளுனர் ஆகியோர் இக்கண்காட்சியைப் பார்வையிட உள்ளனர்.

இக்கண்காட்சியினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ திறந்து வைக்கவுள்ளதாகவும் மீள் எழுச்சித்திட்ட முகாமைத்துவ அலுவலகம் தெரிவிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--