2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மதகு உடைந்ததால் மட்டு. – கல்முனை பாதை துண்டிப்பு

A.P.Mathan   / 2011 ஜனவரி 09 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.லோஹித்)

நேற்று மாலைமுதல் பெய்துவரும் கடும் மழையினால் மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் குருக்கள்மடம் தேவாலயத்திற்கு முன்பாகவுள்ள மதகு உடைப்பெடுத்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.

இன்று காலை 6 மணியளவில் இந்த மதகு உடைப்பெடுத்துள்ளது. பிரதான போக்குவரத்து பாதையான கல்முனை – மட்டக்களப்பு வீதியில் இம்மதகு உடைப்பெடுத்துள்ளமையால் இரண்டு பிரதேசங்களுக்குமான போக்குவரத்துகள் முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கின்றன.

இதேவேளை கிழக்கில் மின்சார தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மினிசூறாவளிபோல் பலத்த காற்று வீசிவருகிறது. இருந்தபோதிலும் இது சூறாவளிக்கான அறிகுறியல்ல என கிழக்குமாகாண வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X