2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சமுர்த்தி நிவாரண முத்திரைகளுக்கு பொருட்களை வழங்குவதில் காலதாமதம் என புகார்

Super User   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடியிலுள்ள சமுர்த்தி நிவாரண முத்திரைகளுக்கு பொருட்களை காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவு சங்கம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக காத்தான்குடியிலுள்ள சமுர்த்தி பயனுகரிகள் தெரிவிக்கின்றனர்.

காத்தான்குடியிலுள்ள சமுர்த்தி பயனுகரிகளின் சமுர்த்தி முத்திரைகளுக்கு காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவு சங்கம் மாதாந்தம் நிவாரண பொருட்களை வழங்க வேண்டும்.

அவ்வாறில்லாமல் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவையே பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதாக பயணாளிகள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

நாங்கள் ஏழைகள் எங்களுக்குரிய சமுர்த்தி முத்திரைக்கான நிவாரண பொருட்களை மாதாந்தம் வழங்க வேண்டும். இதை முறையாக காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவு சங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பயணாளிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

சமுர்த்தி பயணாளிகளிடத்தில் 615 ரூபா, 415 ரூபா, 350 ரூபா, 250 ரூபா மற்றும் 155 ரூபா ஆகிய பெறுமதியான சமுர்த்தி நிவாரண முத்திரைகள் உள்ளன. காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 5000க்கு மேற்பட்டோர் சமுர்த்தி நிவாரண முத்திரைகளை வைத்துள்ளனர்.

இவர்களுக்கு மாதார்ந்தம் நிவாரண பொருட்களை வழங்குவது காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் பணியாகும்.
இந்நிலையில் இவர்களுக்கான நிவாரண பொருட்கள் மாதாந்தம் வழங்கப்படுவதில்லை என பயனுகரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஏ.எச்.முகம்மதிடம் கேட்டபோது,

வழமையாக இவ்வாறு இடம்பெறுவதில்லை. சில நேரங்களில் மாத்திரம் இவ்வாறான நிலை ஏற்படும். இன்னும் ஒரிரு தினங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கான நிவாரண பொருட்களை வழங்கி விடுவோம் தற்போது இவர்களுக்கான அரிசி வழங்குவதற்காக அரிசியினை பெற்றுள்ளோம் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X