2021 ஜனவரி 20, புதன்கிழமை

மட்பாண்டங்களை தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 21 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான், ரி.லோஹித்)

மட்டக்களப்பு, ஏறாவூர் 4 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டினை மேம்படுத்துமுகமாக மட்பாட்டங்களை தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாயக்கிழமை நடைபெற்றது.

செங்கலடி பிரதேச செயலாளர் உதயசிறிதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் 3 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்;கீட்டின் கீழ்; முதற்கட்டமாக 20 மட்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு உபகரண்ஙகள் வழங்கி வைக்கப்பட்டன.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .