2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் இராணுவ வீரரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி, ரி.லோஹித்

மட்டக்களப்பில் இராணுவ வீரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடியிலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் விஜயலால் (27) என்ற இராணுவ வீரரின் சடலமே இவ்வாறு நேற்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

இவரது உடலில் துப்பாக்கிசூட்டு காயங்கள் காணப்படுவதாகவும் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் பிரேத பரிசோதணைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின் அரவது சொந்த ஊரான வெல்லவாய பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இராணுவ வீரர் கடந்த மூன்று வருடங்களாக இராணுவத்தில் கடமையாற்றி வருவதாகவும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை இராணுவத்தினரும் பொலிஸாரும் மேற்கொண்டு வருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--