2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் குறைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 29 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நாடு பூராகவும் உள்ள  மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் குறைக்கப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மீனவர்களுக்குரிய எரிபொருள் மானியம் குறைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயந்திரப் படகுகளை வைத்திருக்கும் 5,092 மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இயந்திரப் படகுகளை வைத்திருக்கும் 3,430 மீனவர்களுக்கே எரிபொருள் மானியம் வழங்கப்பட்டுவருகின்றது.

அவ்வாறே வெளியினை இயந்திரப் படகுகளை வைத்திருக்கும்  1,215 மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது வெளியினை இயந்திரப் படகுகளை வைத்திருக்கும் 1,055 மீனவர்களுக்கே எரிபொருள் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.

பல்தினை இயந்திரப்  படகுகளை வைத்திருக்கும்  374 மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட்டு வந்தது.  தற்போது பல்தினை இயந்திரப் படகுகளை வைத்திருக்கும் 317 மீனவர்களுக்கே எரிபொருள் மானியம் வழங்கப்பட்டுவருகின்றதெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--