2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

காத்தான்குடி பதுறிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் சதுக்கம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பதுறிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் சதுக்கத்தை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

காத்தான்குடி பதுறிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் சதுக்கமானது தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 3.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

இதன்போது தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வீதிகளும் ஜெய்க்கா திட்டத்தின் மூலம் சுமார் 42 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீதிகளும்  திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் மௌலவி ஏ.ஜே.அப்துர் றவூப் மிஸ்பாஹி, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .