2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. மதுவரி அத்தியட்சகரின் புதிய அலுவலகம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மதுவரித் திணைக்களத்தினுடைய  மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகரின் புதிய  அலுவலகம் கல்லடி பிரதான வீதியில் புதன்கிழமை (09) திறந்துவைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக மட்டக்களப்பு, கல்முனை மற்றும் அம்பாறை மதுவரி நிலையங்களைச் சேர்ந்த  பரிசோதகர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

கிழக்கு மாகாண மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளர் கே.எம்.ஜி.பண்டார இப்புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட மதுவரி ஆணையாளர் வசந்த திசாநாயக்கா, மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.தங்கராஜா, மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் என்.சோதிநாதன், கல்முனை பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் ரி.டயலீஸ்பரகுமார், அம்பாறை பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் பிரியந்த லியனகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேற்படி அலுவலகம் இதுவரை காலமும் மட்டக்களப்பு பயனியர் வீதியிலுள்ள கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--