2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

உலக உளநல தினத்தையொட்டிய விழிப்புணர்வு ஊர்வலம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 25 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ.எம்.நூர்தீன்


உலக உளநல தினத்தையொட்டிய பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம், நேற்று (24) காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஊர்வலம் மட்டக்களப்பு கல்லடி சென். செபஸ்த்தியன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரி முன்றலில் முடிவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், மற்றும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசியரிர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் சென்ற மாணவர்கள் உளநலம் தொடர்பான சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கிச் சென்றனர்.
இதன் போது உளநலத்தை வலியுறுத்தி மாணவர்களின் வீதி நாடகமும் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .