2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் 15வயது சிறுவன் கைது

Super User   / 2011 ஜனவரி 08 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருமண்வெளி பகுதியில் 8 வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரியமுற்பட்ட குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவனை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை 1.30 மணியளவில் தனது வீட்டில் வைத்து குறித்த சிறுவன் இவ்வாறு நடந்துகொள்ளமுற்பட்டதாக குறித்த சிறுமியின் தாயார் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதை தொடர்ந்தே குறித்த சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வழமையாக தமது அயல் வீட்டில் உள்ள குறித்த சிறுவன் தமது வீட்டுக்கு வந்து விளையாடுவதாகவும் அவ்வாறு குறித்த தினத்தன்றும் வந்து விளையாடியதாகவும் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளாள். மேற்படி சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 


  Comments - 0

  • tamilsalafi.edicypages.com Sunday, 09 January 2011 01:01 PM

    இந்த விடயம் வெளியே வந்து விட்டது, இப்படி வெளியே வராமல் எத்தனை இருக்கிறதோ ? பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். அதிலும், வளர்ந்த பையன்களுடன் பெண் பிள்ளைகளை தனியே இருக்க அனுமதிக்க கூடாது.இன்னும், ஏனைய பெண்களும் தமது இரத்த உறவு தவிர்ந்த வளர்ந்த பையன்களுடன் தனிமையாக இருப்பதை , நெருங்கி உறவாடுவாதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.
    ஏனெனில், இளங்கன்று பயம் அறியாதது. ஆசை மேலிட்டு விட்டால் எதுவும் செய்து விடும். இந்த இளங்கன்றுகளின் உணர்வுகள் மதிக்கப்பட்டு, முறையாக வழி நடத்தப்பட வேண்டும். சமூகங்கள் சிந்திக்குமா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--