ஜனநாயகத்தை வலியுறுத்திப் பேரணி

ஜனநாயகத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் இன்று (06) மாலை  பேரணியொன்று இடம்பெற்றது.

“ஜனநாயகத்தை வலியுறுத்தும் குரல்” எனும் தொனிப் பொருளில் றைஸ் ஸ்ரீ லங்கா, இலங்கை மெதடிஸ்த்த திரு அவையின் வடக்கு கிழக்கு மறை மாவட்டம் என்பன இணைந்து இந்தப் பேரணியை நடத்தியது.

மட்டக்களப்பு நகரின், காந்திப்பூங்காவுக்கு முன்னால் இடம்பெற்ற ஜனநாயகத்தை வலியுறுத்தும் குரல் பேரணியில் சமயப் பிரமுகர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஜனநாயகத்தை வலியுறுத்துவதுடன், நிலையான அமைதியையும் நிரந்தரமான  சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டுமென, இதன்போது வலியுறுத்தப்பட்டன.

தாய் நாட்டின் நற்பெயரையும் ஜனநாயகத்தையும் கீழ் மட்டத்திற்கு கொண்டுவந்த வன்முறை அரசியல் கலசாராத்தினையும் வன்மையாக கண்டிப்பதாகவும் பேரணியில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்டோர், இலங்கையின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில், வரையறைகளுக்கு அப்பால் நடந்து கொண்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கமாறும் இதன்போது தெரிவித்து கையொப்பங்களையும் வைத்தனர்.


ஜனநாயகத்தை வலியுறுத்திப் பேரணி

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.