2019 ஒக்டோபர் 15, செவ்வாய்க்கிழமை

பிரதேச செயலாளராக வாசுதேவன்

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு நகரை உள்ளடக்கிய மண்முனை வடக்கு  பிரதேச செயலகப் பிரிவின் செயலாளராக உடன் அமுலுக்கு வரும் வகையில் வன்னியசிங்கம் வாசுதேவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர், இதுவரை கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய நிலையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மாணிக்கம் உதயகுமாரின் பரிந்துரைக்கமைய உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவர், கடந்த 2003ல் இருந்து இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்டு  கல்முனை தமிழ்ப்பிரிவு, களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, வாழைச்சேனை பிரதேச செயலகங்களில் உதவி செயலாளராகவும் பின்னர் பிரதேச செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ‪


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .