2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் பொதுச்சந்தை திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் கடந்த 03  வருடங்களாக மூடப்பட்டிருந்த புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் பொதுச்சந்தைக் கட்டிடம் புனரமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (06) காலை திறந்துவைக்கப்பட்டது.

சுமார் மூன்றரை இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இந்த பொதுச்சந்தையை காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் திறந்துவைத்தார்.

புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் கே.எல்.எம்.றகீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எஸ்.எச்.பிர்தௌஸ் மற்றும் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X