2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

மட்டக்களப்பு மக்கள் அரசியல் ஞானம் அற்றவர்கள் அல்ல: ஹாபீஸ்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு,ரீ.கே.றஹ்மத்துல்லா

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு தமது வாக்குகளை அளிக்கும் அளவுக்கு அரசியல் ஞானம் இல்லாதவர்கள் அல்ல. அவர்களின் ஒட்டுமொத்த வாக்கினையும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு அளித்து அதிகப்படியான நான்கு ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர் என கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் ஹகமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாழைச்சேனை வீ.சி விளையாட்டு மைதானத்தில் நேற்று (07) இடம்பெற்ற மு.கா.எழுச்சி மகாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த தேர்தலில் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கும் ஒவ்வொறு வாக்கும் இந்த நாட்டில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராருக்கும் வாக்குகளே ஆகும். இதை தமிழ் மக்கள் புரியாதவர்கல்ல. அந்தவகையில் தமிழ் மக்களின் எந்தவொரு வாக்கும் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கப்படாது. ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குகளை வழங்கவுள்ளனர்.

மட்டக்களப்பில் வாழும் முஸ்லிம் மக்களும் தமது வாக்குகளை வெற்றிலைச் சின்னத்துக்கு வழங்க கூடாது. அவ்வாறு வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கப்படும் வாக்குகள் அது கடந்த மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அங்கிகாரம் வழங்குவது போன்றதாகும்.

இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் நல்லுறவினைப் பலப்படுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பும் அபிவிருத்தி திட்டங்களையும் இன நல்லிணக்க செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

எனவே, இந்த தேர்தலில் தமது கொள்கைகளை வெற்றெடுக்க தமிழ் மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆணை வழங்க இருக்கின்றார்கள். அதைப்போன்று முஸ்லிம் மக்களும் தமது இலட்சியங்களை வெற்றிக் கொள்வதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு ஆணை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .