2021 மே 06, வியாழக்கிழமை

அரவிந்தகுமார் எம்.பி தென்னாபிரிக்காவுக்கு விஜயம்

Kogilavani   / 2016 ஜூலை 29 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபதலைவருமாகிய அ.அரவிந்தகுமார், எதிர்வரும் 2ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் செயலணியின் மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைக்கான கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக அவர் தென்னாபிரிக்காவுக்கு விஜயம்மேற்கொள்ளவுள்ளார்.
அச்செய்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பொதுநலவாய நாடுகளின் செயலணியின் மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைக்கான கிளையின் ஏற்பாட்டில், தென்னாபிரிக்க ஜூவனர்ஸ் வேர்க் மற்றும் கேப்டவுன் நகரங்களில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை மனித உரிமைகள் தொடரபான கருத்தரங்கில் நடைபெறவுள்ளது.

இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய அ.அரவிந்தகுமார் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .