2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இரண்டு விபத்துகளில் ஒருவர் பலி; அறுவர் காயம்

எம். செல்வராஜா   / 2017 மே 23 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


கேகாலை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில், நேற்று இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் 14 வயது மாணவன் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

மங்கலகம பதியத்தலாவையில், பொலிஸ் ஜீப்பொன்றும் வானொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பொலிஸ் ஜீப்பில் பயணித்த ஆறு பொலிஸாரும் காயமடைந்த நிலையில் பதியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதேவேளை, மஹியங்கனை, கந்தகெட்டிய பிரதான வீதி, கொடிகமுவவில், 14 வயது மாணவன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில், மாணவன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.   

நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில், கந்தகெட்டிய எஸ்.சேனாநாயக்க மகா வித்தியாலத்தில் தரம் 9 இல் கல்வி பயின்று வந்த மாணவனே, உயிரிழந்துள்ளார்.   

இவர் தனது நண்பனுக்கு தெரியாமல், நண்பனின் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .