2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஜீவன் தொண்டமானின் நியமனத்துக்கு அதிருப்தி?

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த், எஸ் சதீஸ்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதனை மறுத்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களினதும் ஏகமனதான தீர்மானத்தின் ஊடாகவே, இ.தொ.காவின் இளைஞர் அணியின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் இதன்போது எவ்வித எதிர்ப்புகளையோ, அதிருப்திகளையோ யாரும் தெரிவிக்கவில்லை என்றும், இ.தொ.காவின் உபதலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.ராமேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இ.தொ.காவின் இளைஞர் அணி சிறப்பாக செயற்பட்டுவரும் ஒரு பிரிவாகும் என்றும் அரசியலுக்குள் உள்ளவாங்கப்படாது செயற்பட்ட ராஜமணி பிரசாந்த், இ.தொ.காவின் இளைஞர் அணியியை சிறப்பாக வழிநடத்திச் சென்றார் என்றும் பரந்தளவிலான அனைத்துப் பகுதிகளுக்கும் சேவைகளையும் செய்து வந்தார் என்றும் தெரிவித்தார்.

ஆனால் அவர் தற்போது அரசியலினுள் உள்வாங்கப்பட்டு, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளராகச் செயற்படுவதால், கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் அவர் சேவை செய்ய வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளதெனவும் எனவே அவருக்கு இளைஞர் அணியை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் குறைவு என்ற காரணத்தினால் கட்டாயம் இளைஞர்களை வழிநடத்தி அவர்களையும் அரவணைத்துச் செல்லவேண்டிய தேவை உள்ளமையால், இ.தொ.காவின் இளைஞர் அணியின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

இ.தொ.காவில் நாடளாவிய ரீதியில் அங்கம் வகிக்கும் தேசிய சபை உறுப்பினர்கள் ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றியதன் பின்னரே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தனி நபரின அதிகாரத்தால் வழங்கப்பட்ட நியமனம் அல்ல என்றும் சிலர் அரசியல் நோக்கத்துக்காக விமர்சனங்களை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .