2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி மாணவன் பலி

சிவாணி ஸ்ரீ   / 2020 மார்ச் 03 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

காவத்தை, அவப்பை தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள ஆற்றில் நீராடச் சென்ற மாணவன், நேற்று (02) மாலை, நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

இறக்குவானை பரியோவான் கல்லூரியில் கடந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய அருள்செல்வம் திவாகர் எனும் மாணவனே இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

தனது சக நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே, இவர் நீரில் மூழ்கியதாகவும் எனினும் அயலில் உள்ளவர்கள் இவரை மீட்டு, காவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X