2021 மே 18, செவ்வாய்க்கிழமை

படுகொலைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் எனக்கோரி வட்டவளை பிரதேச மக்கள், வட்டவளை நகரத்தில் இன்று (04) சுமார் 1 மணி நேரம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வட்டவளை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தவேண்டும், துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்; எனக்கோரினர்.

அத்தோடு, துஷ்பிரயோகங்களை தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் கொடுக்கும் முகமாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .