2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ரயில் மிதிபலகையில் பயணித்த மாணவன் தூணில் மோதி விழுந்து காயம்

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன் 

கொட்டகலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ரயிலின் மிதிப்பலகையில் சென்ற பாடசாலை மாணவனொருவன், தண்டவாளத்துக்கு அருகிலிருந்த தூண் ஒன்றிண் மோதுண்டு விழுந்த சம்பவம், இன்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவர், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

வட்டவலை ரயில் நிலையத்துக்கும் கலபட ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட 99ஆவது மைல்கல் பகுதியிலேயே, பிற்பகல் 1.45 மணியளவில் இச்சம்பவம் இம்பெற்றுள்ளது.  விபத்தில், 16  வயதுடைய எஸ்.சதீஸ் என்ற மாணவனே காயமுற்றுள்ளார்.

மாணவனும் அவரது சக வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் இணைந்து,  நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர் ஒருவரைப் பார்வையிட்டு, நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன்​போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X