2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

அங்கவீனர்களுக்கான பாடநெறிகளில் மாற்றம்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஆர்.ராவின்)

அங்கவீனர்களுக்காக போதிக்கப்படும் பாடநெறிகளில் மாற்றம் செய்ய சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கவீனர்களுக்கு போதிக்கப்படும் பாடநெறிகள் காலம் கடந்ததை கருத்திற்கொண்டு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஜீ.எம்.கணேபாலவின் பணிப்புரைக்கமைய பலாங்கொடையில் அமைந்துள்ள அங்கவீனர்களுக்கான பாடசாலையில் புதிய பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த பாடசாலையில் மாணவர்களுக்கான விடுதி ஒன்றும் அண்மையில் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--