2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா ஏற்பாடுகள் பூர்த்தி

Menaka Mookandi   / 2010 நவம்பர் 08 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மத்திய மாகாணத்தமிழ் சாகித்திய விழா எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில் ஹட்டன் டி.கே.டப்ளியூ கலாசார மண்டபத்தில் மத்திய மாகாண தமிழ் கல்வி கலாசார அமைச்சர் திருமதி. அனுஷியா சிவராஜா இந்த அமைச்சின் செயலாளர் திருமதி ஷிராணி வீரக்கோன் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேக்கடுவும் சிறப்பு அதிதியாக உதவி இந்திய தூதுவர் ஆர்.கே.மிஸ்ராவும் மத்திய மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இரா.சிவலிங்கம் அரங்கத்தின் பிரதம அதிதியாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாகவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை சிறப்பு அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

14ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள சி.வி.வேலுப்பிள்ளை அரங்கத்தின் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி.இரத்நாயக்கவும் சிறப்பு அதிதிகளாக மத்திய மாகாண விவசாய நீர்பாசண அமைச்சர் நிமல் பியதிஸ்ஸவும் அட்டன் நகர பிதா ஏ.நந்தகுமாரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இராமநாதன் தொண்டமான் அரங்கத்தின் பிரதம அதிதியாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்துசிவலிங்கமும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மத்திய மாகாணத்தமிழ் சாகித்திய விழாவினை முன்னிட்டு கலைகலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்துகின்ற கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், பல்துறை சாதனையாளர்களுக்கான பாராட்டு நிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--