2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கட்டுகஸ்தோட்டை கடையிலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 09 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, கட்டுகஸ்தோட்டை நகர கடையொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த  ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.    

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கினிகத்தேனை பிரதேசத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற அரச ஊழியரான டீ.எம்.நன்தசேனவென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தங்கியிருந்த கடை சில தினங்களாக மூடியிருந்ததாகவும் இவரை பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றும் பிரதேசவாசிகள் கூறினர்.

இன்று மாலை இம்மரணம் சம்பந்தமாக விசாரணை நடத்திய கண்டி மேலதிக நீதவான் றவீன்த்ர பிரேமரத்ன, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .