2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மண்சரிவால் சிறுவன் பலி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 09 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

கடந்த சில வாரகாலமாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவால் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதுடன், 10இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பதுளை தெல்பெத்த, மலங்கமுவ பிரதேசத்தில்  திடீரென ஏற்பட்ட மண்சரிவால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளதுடன், இதனால் வீட்டிலிருந்த 7 வயது சிறுவன் உயிரிழந்த அதேவேளை, 14 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   

வருண திஸாநாயக்க என்ற சிறுவனே இந்த மண்சரிவில் அகப்பட்டு உயிரிழந்தவர் ஆவர்.   

பதுளை வெலிமடை பிரதான வீதியில் அட்டாம்பிட்டிய வெல்லவெல பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.  இந்த வீதியை பயன்படுத்துபவர்கள் பதுளை ஹாலிஎல, பண்டாரவளை ஊடாக வெலிமடை வீதியை சென்றடையலாம் எனவும் வெலிமடை, பண்டாரவளை ஊடான வீதியில் பதுளைக்கு வாகனங்கள் செல்லலாம் எனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹாலிஎல கலஉட வீதியில், ஹெதக்ம பிரதேசத்தில் இடையிடையே மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன்,  மண்சரிவு ஏற்பட்டதனால் மின்சாரம் கம்பங்களும்  தொலைபேசி கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன.

மலையகத்திற்கான ரயில் வீதியில் பதுளை பண்டாரவளைக்கும் இடையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக ரயில் சேவைகளும் இன்று காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, ஊவ பரணகம பிரதேசத்தில் வீட்டின் சுவரொன்று இடிந்து விழுந்ததில் தாயும் பிள்ளையும் படுகாயமடைந்த நிலையில் ஊவ பரணகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .