2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கணவரை கொலை செய்து யுத்தத்தில் காணாமல் போனதாக பொய் முறைப்பாடு: மனைவி கைது

Menaka Mookandi   / 2011 நவம்பர் 21 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கணவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு யுத்த காலத்தில் காணாமல் போய்விட்டார் என்று பொலிஸில் பொய் முறைப்பாடு செய்திருந்த பெண்ணொருவரை கண்டி, ஹத்தரலியத்த பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். 

1989ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்துடன் தொடர்புடையதான மேற்படி பெண், 22 வருடங்களுக்கு முன் நாட்டின் தென் பிரதேசங்களில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளின் போது தனது கணவர் காணாமற் போனதாக முறைப்பாடு செய்து பொலிஸாரை திசை திருப்பி இருந்ததாக தெரிவிக்ககப்படுகின்றது.

இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை ஹத்தரலியத்த பொலிஸார் நடத்தி வருகின்றனர். 


  Comments - 0

  • Mohamed Ihjas Monday, 21 November 2011 03:24 PM

    பெண்கள் ஆண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல கெட்டவர்களும் அல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X