2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

தனியார் பஸ் உரிமையாளர்களின் போராட்டம் கைவிடல்

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

நுவரெலியா ஹட்டன் பிரதான பாதையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வீதி போக்குவரத்து அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் சீ.எஸ்.சமரநாயக்கவிற்கும் பஸ் உரிமையாளர்களும் இடையிலான பேச்சுவார்த்தையினை அடுத்தே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவாhத்தையில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டதாக வீதி போக்குவரத்து அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் சீ.எஸ்.சமரநாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்பாக பாதையை போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் செப்பணிட்டு தருவதாக கியனம் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்த்தார்.

நுவரெலியா - ஹட்டன் பிரதான பாதையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று  காலை முதல் பணிபகிஷ்ஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--