2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மாட்டை அறுத்த இருவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் ஆஸிக்   

அக்குறணை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடு ஒன்றை  அறுத்த இரு சந்தேக நபர்களை அலவத்துகொடை பொலிஸார் இன்று(08) அதிகாலை கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து, மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது 77 கிலோகிராம் அளவிலான இறைச்சியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று(08) கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--