2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

அண்ணனின் காலை துண்டாடிய தம்பி கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 13 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை, லெச்சுமி தோட்டம் மேற்பிரிவு தோட்டத்தில் சகோதரர்களுக்கிடயில் ஏற்பட்ட கைகலப்பில் அண்ணனின் காலை அவரது தம்பி வெட்டி துண்டாக்கிய சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

மது போதையில் இருந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட  வாய்த்;தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்தே இந்த சம்பவம் ஏற்படடுள்ளதாக  பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பட்ட நிலையில் அங்கிருந்து  கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்  பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .