2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த எழுவர் கைது

Editorial   / 2019 ஜூலை 12 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

 

பொகவந்தலாவ – டின்சின் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, மேற்படிப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார், குறித்த எழுவரையும் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி எழுவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .