2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆய்வு மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிமுதல் நாளை பிற்பகல் 1 மணிவரையான 24 மணித்தியால காலப்பகுதியில் இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவான நிலையில், மண்சரிவு, பாறைகள் சரிவு, தாழிறங்கள் உள்ளிட்ட பல அபாயங்கள் காணப்படுவதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் காலி,  கம்பஹா, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் 75 தொடக்கம் 100 மி.மீ வரையில் பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .