ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் சமையலறைக்கு சீல் வைப்பு

எஸ்.கணேசன்

கொட்டகலை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோரது பணிப்புரைக்கு அமைவாக, பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் சமையலறைக்கு, இன்று (05) மாலை, சீல் வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 450 ஆசிரியர் பயிலுநர்கள் கல்வி பயிலும் மேற்படி கல்லூரியில், நாளாந்தம், குறித்த சமையல் அறையிலிருந்தே சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன.

ஆனால், சமையலறையில் சுத்தம் பேணப்படாததன் காரணமாக, ஆசிரியர் பயிலுநர்கள் நாளாந்தம் நோய்வாய்ப்பட்டு வருவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மேற்படி கல்வியல் கல்லூரிக்கு இன்று (05) திடீர் விஜயம் மேற்கொண்டதுன், சமலயறைக்கு சீல் வைத்துள்ளனர்.

குறித்த கல்லூரியில், கடந்த ஒக்டோபர் மாதமளவில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிலுநர்கள், உணவு விசமானதன் காரணமாக உடல்நலக் குறைவால், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, குறித்த கல்வியியற் கல்லூரியில், சமையலில் ஈடுபவர்களுக்கு மூன்று மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், சமயலறையில் சுத்தம் பேணப்படாமையால், சமயலறைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சமையலறையை மீண்டும் திறக்கும் வரை, ஆசிரியர் பயிலுநர்களுக்கு, வெளியிலிருந்து சாப்பாடு பெற்றுக்கொடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பரிசோதகர் எஸ்.சௌந்தரராகவன் தெரிவித்தார்.


ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் சமையலறைக்கு சீல் வைப்பு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.