Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
மகேஸ்வரி விஜயனந்தன்
கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 2 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நிலுவையிலுள்ள 8 பில்லியன் ரூபாய் பணம், தொழிலாளர்களுக்கு இதுவரைக்கும் வழங்கப்படாதமை குறித்து விசாரிப்பதற்கு, ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும் என, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மகப்பேற்று நன்மைகள், கடை ஊழியர் திருத்தச் சட்ட விவாதம், நேற்று முன்தினம (06) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றி அவர்,
இந்த 8 பில்லியன் ரூபாயும், தொழிலாளர்களுக்கு இன்னும் வழங்கப்படாமை, ஒரு பகல்கொள்ளையாகவே காணப்படுகின்றது என்று கூறிய அவர், இரண்டு வருடத்துக்கு ஒரு முறை செய்யப்படும் இந்தக் கூட்டு ஒப்பந்தம், ஒரு வருடம் தாமதித்தே மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டார்.
இந்த தாமத ஒப்பந்தக் கைசாத்தால் ஏற்பட்ட நிலுவை இன்னும் செலுத்தப்படவில்லை என்றும் இதில், கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய இரண்டு தரப்பினருக்கும் இடையில், வேறேதும் உடன்படிக்கை உண்டு என்பதை அறியத்தருகின்றது என்றும் அவர் கூறினார்.
எனவே, பல ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்காக, நல்லாட்சி அரசாங்கம் ஆணைக்குழுக்களை நியமித்ததைப்போன்றே, இந்த 8 பில்லியன் ரூபாய் மோசடி பற்றி விசாரிக்கவும் ஆணைக்குழுவொன்றை நியமிக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .