2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பாணந்துறை – கல்கிஸையில் பாரிய தேடுதல்

Super User   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனாநாயக்க)

பாணந்துறை முதல் கல்கிஸை வரையான பகுதியில் இன்று அதிகாலை 3 மணி முதல் 10 மணிவரை பாரிய தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது.  சுமார் 1300 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இத்தேடுதலில் பங்குபற்றினர்.

1700 வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையின் புதிய முயற்சியாக இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கஞ்சா ஹெரோயின் பாபுல்இ மற்றும் பல சட்டவிரோத போதைப்பொருட்கள் இச்சோதனையின் போது கைப்பற்றப்பட்டதுடன் 16 சந்தேக நபர்களும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் விற்பனை மூலம் திரட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகைப் பணத்துடன் ஹெரோயின் விற்பனையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--