2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

எதிர்ப்பு அரசியல் மூலம் எதனையும் சாதிக்க முடியாது; சகவாழ்வு அரசியலையே மு.கா பின்பற்றுகிறது: பஷீர்

Super User   / 2011 நவம்பர் 29 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய அரசியல் சூழ்நிலையில் சகவாழ்வு அரசியலையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அக்கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவவூத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25ஆவது ஆண்டு நிறைவின் ஆரம்ப நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

'எதிர்ப்பு அரசியல் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. அதனால் சகவாழ்வு அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளவுள்ளது' என அவர் தெரிவித்தார்.

எமது கட்சியில் உள்ளவர்கள் மத்தியில் புரிந்துணர்வு அவசியம். ஆனால், இன்று ஒவ்வொரு பிரதேசத்திலும் எமது கட்சி சார்பாக நான்கு மற்றும் ஐந்து தலைவர்கள் உள்ளனர்.

இதனால் கட்சி + கட்சி + கட்சி என்று இருந்த அரசியல் ஆள் + ஆள் + ஆள்  என மாறியுள்ளது. சமூகத்திற்கான அரசியல் இலக்கு இன்னும் உள்ளது. ஆனால் தனிநபருக்கான அரசியல் இலக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக மாறியுள்ளது என பஷீர் சேகுதாவவூத் தெரிவித்தார்.  

இதற்காக கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள் மற்றும் விமர்சிப்பவர்களை கட்சிக்குள் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் என அவர் கூறினார்.

பெரிய கட்சிகளுடன் சிறிய கட்சிகள் கொண்டுள்ள உறவின் மூலம் மக்கள் மத்தியிலிருந்து சிறிய கட்சிகள் தூரப்படுத்தப்படும் என பஷீர் சேகுதாவவூத் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0

 • sarraj Wednesday, 30 November 2011 09:42 PM

  சும்மா கத விடாம போங்க சார். அஷ்ரப் ஹாஜிக்கு பிறகு மினிஸ்டர் ரிஷாத் போல யாரு அரசியல் செய்தது? எல்லாம் சும்மா கத.

  Reply : 0       0

  ARM Wednesday, 30 November 2011 10:22 PM

  நீங்க நெனக்கிற அரசியல பண்ணுங்கப்பா எங்களுக்கு விளக்கம் சொல்ல வேணாம்.

  Reply : 0       0

  kulthooran Wednesday, 30 November 2011 04:11 AM

  உங்களது தனி நபர் அரசியல் உங்களை அமைச்சராக்கி உள்ளத்தில் மகிழ்ச்சி தானே?

  Reply : 0       0

  waaqiff Wednesday, 30 November 2011 04:12 AM

  மேடையில் பேசுகிறீர்கள். ஆனால் செயலில் காணோம் .. எப்படி வெளிச் சென்றவர்களை உள்வாங்குவது ???????

  Reply : 0       0

  KLM Wednesday, 30 November 2011 04:20 AM

  சரணாகதி அரசியல்தான் உங்களுக்கு சரி என்று சொல்லுங்க.

  Reply : 0       0

  hameed Wednesday, 30 November 2011 04:37 AM

  காலம் கடந்த ஞானம் . இவ்வளவு காலமும் வீணடித்து விட்டீர்களே .... பாவம் போராளிகள் ...

  Reply : 0       0

  Muha Wednesday, 30 November 2011 04:45 AM

  எல்லாம் மேடைப் பேச்சோடு முடிந்து விடும் செயலில் எதுவும் செய்ததாக தெரியவில்லை. பார்ப்போம்.......

  Reply : 0       0

  ilakijan Wednesday, 30 November 2011 05:01 AM

  அடிமைச் சேவகத்திற்கு ஒரு நியாயம்.

  Reply : 0       0

  ummpa Wednesday, 30 November 2011 02:33 PM

  முடிந்தால் அமீரலி, ஹிஸ்புல்லாஹ் இவர்களை இணைத்தால் உங்கள் நிலைமை? சும்மா பிதட்டல் விடாமல் உங்கள் நியமன உறுப்புரிமை பாதுகாத்துகொள்ளுங்கள்.

  Reply : 0       0

  aaa Wednesday, 30 November 2011 03:25 PM

  இததானே வடமாகாண அமைச்சர் அன்று செய்து விட்டார்

  Reply : 0       0

  ameerudeen Wednesday, 30 November 2011 03:34 PM

  நாங்களும் கட்சி கட்சி என்றுதான் காலத்தை கழிக்கிறோம். அனால் கண்ட பயன் ஏதுமில்லை. ஆளுக்காள் போட்டி. கட்சிக்குள் பிளவு. உறுப்பினர்களுக்குள் உடைவு. அவர்களை ஒற்றுமைப் படுத்துங்க சார்.

  Reply : 0       0

  USM Wednesday, 30 November 2011 06:45 PM

  இப்படி சரணாகதி அரசியல ஜனாதிபதி எலெக்சன்லயும் செய்திருந்தால் உங்ககுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமான மதிப்பு அரசிடம் இருந்து கிடைத்திருக்கும் பசீர்.....

  Reply : 0       0

  சிறாஜ் Wednesday, 30 November 2011 08:00 PM

  நான் ஒன்றும் சொல்ல மாட்டன்......................

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X