2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

தங்க பிஸ்கெட்டுக்களுடன் நாட்டுக்கு வந்தவர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு ஸ்பெயின், சாஜா நகரில் இருந்து 100 கிராம் நிறையுடைய தங்க பிஸ்கெட் நான்குடன் வந்தவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை 07.45 மணிக்கு வந்த மிஹின் லங்கா விமானத்துக்கு சொந்தமான விமானத்தில் நாட்டுக்கு வந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், கொழும்பு - 13 பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான நபர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாகவும் இவரை மேலதிக விசாரணையின் பொருட்டு சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .