2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை

வாத்துவவில் பணம் கொள்ளை;சந்தேக நபர்களைத் தேடி வலைவீச்சு

Editorial   / 2017 நவம்பர் 05 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாத்துவை, பொத்துப்பிட்டிய வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தை உடைத்து 6 இலட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் சந்தேக நபர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரும்பு விற்பனை செய்யும் வர்த்தக நிலையம், கடந்த நவம்பர் 01ஆம் திகதி இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்தின் கதவு உடைக்கப்பட்டே கொள்ளையர்கள் உள்ளே வந்துள்ளதாகவும் கணக்காளரின் அறையில் இருந்த பணமே கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் வர்த்தக நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பு மின்சாரத்தைத் துண்டித்துள்ளனர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதனால் சி.சி.டி.வி. காணொகளைப் பெறுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளால் அனைத்துத் தடயங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளையர்கள் வான் ஒன்றில் வந்திருக்கக் கூடும் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தின் ஊழியர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .