2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழில் உள்ள கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 360 கிலோகி​ராம் எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் அதிரடி படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில், சனிக்கிழமை (18) மதியம், யாழ். நகர் பகுதிகளில் உள்ள கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

இதன் போது, ஒரு கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 30 கிலோ கிராம்  தங்கூசி வலையும் மற்றைய கடையில் இருந்து சுமார் 330 கிலோ கிராம் தங்கூசி வலையும் மீட்கப்பட்டுள்ளன. 

அதனை அடுத்து கடை உரிமையாளர்கள் இருவரையும் விசேட பொலிஸ் அதிரடி படையினர் கைது செய்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததுடன், மீட்கப்பட்ட வலைகளையும் ஒப்படைத்தனர். 

தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடை உரிமையாளர்களையும் வலைகளையும் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .