2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

‘தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வியாழன் வௌிவரும்’

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல், வியாழக்கிழமை (12) வெளியிடப்படுமென, வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில், இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாட்டில் இனப் பிரச்சினை இல்லை என்று ஜனாதிபதி கூறிய கருத்து தவறானதெனவும் இந்த நாட்டில் இனப் பிரச்சினை இருப்பதாகவும் கூறினார்.

நாட்டில், தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றார்களெனச் சாடிய அவர், நாட்டில், இனப் பிரச்சினை இருக்கின்றது என்பதை ஜனாதிபதிக்கு அடித்துக் கூறவேண்டிய தேவை இருப்பதாகவும் கூறினார்.

அத்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்ந்த ஒரு கூட்டத்தில், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை விமர்சிப்பது பொருத்தமில்லையெனத் தெரிவித்த அவர், இவ்வாறு விமர்சிக்கப்படுகின்ற கூட்டங்கள் தேவையில்லையெனவும் இந்த விடையம் தொடர்பாக கட்சி தலைமையிடம் பேசுவேனெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .